தீபாவளி ஆஃபரில் களமிறங்கும் ஸ்பெஷல் எடிஷன் கார்கள்! மாருதி முதல் மஹிந்திரா வரை; மிஸ் பண்ணிடாதீங்க! அப்பறம் வருத்தப்படுவீங்க! - Seithipunal
Seithipunal


பண்டிகை காலம் நெருங்கியுள்ளதால், கார் சந்தையில் புதிய மாற்றங்கள் மற்றும் ஸ்பெஷல் எடிஷன்களால் கார் பிரியர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர். முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள், அதிக சலுகைகளோடு புது மாடல்களை அறிமுகம் செய்து, விற்பனையை வளர்த்திடத் திட்டமிட்டு இருக்கின்றன. 

மாருதி சுசுகியின் புதிய "வேகன் ஆர் வால்ட்ஸ் எடிஷன்" ஆரம்ப விலை ₹5.65 லட்சம். இந்த மாடலின் சிறப்பு அம்சங்களில் பனி விளக்குகள் (Fog Lights), வீல் ஆர்ச் கிளாடிங், பம்பர் பாதுகாப்பு (Bumper Protectors) மற்றும் பாடி சைட் மோல்டிங் உள்ளிட்டவை அடங்குகின்றன. மேலும், இது 6.2 அங்குல தொடுதிரை (Touchscreen), ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா போன்ற வசதிகளோடு வருகிறது. 

மாருதி சுசுகி போலவே, பலேனோ நிறுவனமும் தனது "ரீகல் எடிஷனை" வெளியிட்டுள்ளது. இது ₹7.3 லட்சம் ஆரம்ப விலையில் கிடைக்கிறது. இது முன்புற மற்றும் பின்புற அண்டர்பாடி ஸ்பாய்லர்கள், 3D மேட்ஸ், குரோம் அலங்காரம் போன்றவை கொண்டுள்ளது. மேலும், நெக்ஸா குஷன்கள், சீட் கவர்கள் மற்றும் குரோம் கதவு கைப்பிடிகள் இதன் கூடுதல் அம்சங்களாகும்.

இதேபோல், டொயோட்டா நிறுவனமும் தனது பண்டிகை கால லிமிடெட் எடிஷன்களை வெளியிட்டுள்ளது, இதில் Hyryder, Glanza, Rumion, மற்றும் Taisor போன்ற பிரபல மாடல்கள் அடங்குகின்றன. இந்த மாடல்களின் விலை ₹6 லட்சத்தில் துவங்குகிறது. டொயோட்டாவின் இந்த சலுகை வரம்பு கொண்டது; பண்டிகை காலத்தில் மட்டும் இந்த சிறப்பு அம்சங்கள் வழங்கப்படும். 

மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ கிளாசிக் பாஸ் எடிஷன் ₹16 லட்சம் ஆரம்ப விலையில் கிடைக்கிறது. இந்த மாடலில் வெயில் மற்றும் மழைக்கான உபகரணங்கள், முன்புற ஸ்கிட் பிளேட், பின்புற ரிவர்ஸ் கேமரா, குறைந்த எரிபொருள் செலவு மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவை அடங்குகின்றன.

இதனால், பண்டிகை காலத்தில் கார் பிரியர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பாக இருக்கின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Special edition cars on Diwali offer From Maruti to Mahindra Don miss it


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->