செல்போனில் அடிக்கடி விளம்பரங்கள் வருகிறதா? ட்ராய் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


மக்கள் மத்தியில் செல்போன் பயன்பாடு அதிகரித்துள்ளது. அப்படி பயன்படுத்தும் போது அதிகளவில் விளம்பரங்கள் வருகின்றன. இதனால், ஏராளமானோர் எரிச்சலடைந்து செல்போன் பயன்பாட்டை குறைத்து வருகின்றனர். இந்த சூழலில் தொலைத்தொடர்பு சேவைகளை பயன்படுத்துவோரின் அனுபவங்களை மேம்படுத்த, தொலைத்தொடர்புத் துறை மற்றும் ட்ராய் கூட்டு நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பாக ட்ராய் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- "தொலைத்தொடர்பு சேவைகளை பயன்படுத்துவோரின் அனுபவங்களை மேம்படுத்த, விளம்பரதாரர் தொல்லையில்லாத, தரமான தொலைத்தொடர்பு சேவைகளை அதிவேக தரவுகளுடன் வழங்குவதற்கு தொலைத்தொடர்புத் துறை மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான ட்ராய் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன.

அதாவது, விளம்பரதாரர் அழைப்பு தொல்லையை தடுக்க, ரோபோ அழைப்புகள் மற்றும் முன்பதிவு செய்யப்பட்ட அழைப்புகள் உள்ளிட்ட ஒட்டுமொத்த விளம்பரதாரர் அழைப்பு இணைப்புகளை பயன்படுத்தும் நிறுவனங்களின் இணைப்பை துண்டித்து, அவற்றை கருப்புப் பட்டியலில் சேர்க்குமாறும் ட்ராய் அமைப்பு தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

கடந்த இருவாரத்தில் மட்டும், இதுபோன்ற 3.5 லட்சம் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, 50 நிறுவனங்கள் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இதுதவிர, சுமார் 3.5 லட்சம் பயன்படுத்தப்படாத/ உறுதி செய்யப்படாத குறுஞ்செய்தி தலைப்புகள் மற்றும் 12 லட்சம் வார்ப்புருப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

train info advertisement cancel at mobile


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->