செம்ம அப்-டேட் கொடுத்த வாட்ஸ்-அப்.! ஆனால் ஒரு கண்டிஷன்.!
whats app update aug 22
மெட்டா நிறுவனத்தின் மெசேஜிங் செயலியான வாட்ஸ்அப்பில், ஸ்டேட்டஸ்-ஐ நேரடியாக வாட்ஸ்அப் சாட் லிஸ்ட்டில் இருந்தே பார்க்கும் வசதியை வழங்கியுள்ளது.
இந்த அம்சம் வாட்ஸ்அப் ஐ.ஓ.எஸ் பீட்டா வெர்ஷன் பயன்படுத்தி வரும் சில பயனர்களுக்கு மட்டும் தான் வழங்கப்பட்டுள்ளது.
விரைவில் மற்ற பீட்டா பயனர்களுக்கும் வழங்கப்பட உள்ளது. இதன் பின்னர் அனைவருக்குமான ஸ்டேபில் வெர்ஷனில் வழங்கப்படும்.
இதன் மூலம் ஸ்டோரிஸ் போன்றே புகைப்படம் மற்றும் வீடியோ உள்ளிட்டவைகளை 24 மணி நேரத்தில் மறையும் வகையில் செட் செய்து கொள்ளலாம்.
இதனை தொடர்ந்து சாட்டில் இருந்து அழிக்கப்பட்ட குறுந்தகவலை மீண்டும் பெற செய்யும் வசதியை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
இதன் மூலம் மிக முக்கிய உரையாடலின் போது தவறுதலாக குறுந்தகவலை அழித்து விட்டால் அதனை மீண்டும் பெற முடியும்.