Va Varalam Va | ஹிரோவாக 10 வருஷம் ஆச்சு.! தயாரிப்பாளர் எஸ்.பி.ஆர்-க்கு நன்றி கூறிய பாலாஜி முருகதாஸ்.!! - Seithipunal
Seithipunal


பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான பாலாஜி முருகதாஸ் எஸ்.ஜி.எஸ் கிரியேட்டிவ் மீடியா சார்பில் எஸ்.பி.ஆர் தயாரிப்பில் "வா வரலாம் வா" திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்த படத்தில் ரெடின் கிங்ஸ்லீ முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இவர்களுடன் தீபா, சிங்கம் புலி, காயத்ரி ரெமா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். வா வரலாம் வா திரைப்படத்தில் கதாநாயகி மகானா சஞ்சீவி நடிக்க, வில்லன் கதாபாத்திரத்தை மைம் கோபி ஏற்று நடித்துள்ளார்.

வா வரலாம் வா திரைப்படத்திற்கு தேனிசைத்தென்றல் தேவா இசை அமைத்துள்ளார். இந்த படத்திற்கான இசை வெளியீட்டு விழா கடந்த நவம்பர் 15ஆம் தேதி சென்னையில் வெகு விமர்சையாக நடைபெற்றது. வா வரலாம் வா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பாலாஜி முருகதாஸ் "பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தான் எனது பெயர் தெரிந்திருக்கும். இதற்கு முன்பு நான் Mr India International , Mr India Modeling , Times of India Indian Leval Top 16 , Best Model , Junior Audition உட்பட பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, இந்த படத்தில் கதாநாயகனாக தேர்வு செய்யப்பட 10 ஆண்டுகள் ஆகிவிட்டன.

இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் எஸ்.பி.ஆர் அவர்களுக்கு நன்றி, இயக்குனர் எல்.ஜி ரவிச்சந்தர் அவர்களுக்கு நன்றி, நான் நடிக்கும் படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவா அவர்களுக்கு நன்றி, என்னுடன் சேர்ந்து நடித்த சக நடிகர்களுக்கு, தொழில்நுட்ப குழு, துணை இயக்குனர்கள் உட்பட அனைவர்க்கும் நன்றி. நீங்கள் என்னைவிட திறமை கொண்டவர்கள், அனுபவம் கொண்டவர்கள்.

உங்களுடன் நடித்தது, பணியாற்றியது எனக்கு பெருமை. கேமராமேன் கார்த்திக் அவர்களுக்கு மிகுந்த நன்றி. தயாரிப்பாளர், இயக்குனர் என்னை நம்பியதற்கு நன்றி. கடும் வெயிலிலும் எனது படத்தை ஒளிப்பதிவு செய்து கொடுத்தார். நான் எதற்காக நன்றி மட்டுமே கூறுகிறேன் என்பதால், இங்குள்ளவர்களை வாழ்த்தும் வயதும், அன்புபவமும் எனக்கு இல்லை. ஆகையால் உங்களுக்கு நன்றி" என மேடையில் அமர்ந்து அனைவரையும் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டு நன்றி தெரிவித்தார்.

மேலும் "எனக்கு நடனம் வரவில்லை என்றாலும், அதற்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கு நன்றி. அக்னி வெயிலில் படத்திற்காக உழைத்துள்ளோம். சிறிய படம் நன்றாக மக்களிடம் சென்றடைந்தால் மட்டுமே, என்னைப்போல பல நடிகர்களுக்கும், சினிமா கலைஞர்களுக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். பல குடும்பங்கள் நன்றாக இருக்கும். இந்த படம் நன்றாக இருந்தால், அதனை மக்களிடம் சென்று சேர்க்க வேண்டியது ஊடகத்தின் செயல். எங்களை போல சிறிய அளவிலான படம் எடுத்தவர்களை நாங்கள் மதிக்கிறோம், நன்றி." என உணர்ச்சி பொங்க பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Balaji Murugadoss thanked to producer SBR for va varalam va opportunity


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->