நான் 9 வயசுல.. ஒட்டுத்துணி கூட இல்லாம.. சேலம் ஆர்.ஆர் தமிழ்செல்வன் உருக்கம்.!! - Seithipunal
Seithipunal


பிக் பாஸ் புகழ் பாலாஜி முருகதாஸ் நடிக்கும் வா வரலாம் வா திரைப்படம் வரும் டிசம்பர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள், தயாரிப்பாளர் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள், முன்னணி இயக்குனர்கள் மற்றும் பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதேபோன்று சேலம் ஆர்.ஆர் பிரியாணி கடை நிறுவனரும் தொழிலதிபருமான தமிழ்செல்வமும் கலந்து கொண்டார்.ன

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர் "வா வரலாம் வா திரைப்படத்தின் இசையமைப்பாளர் தேவா அவர்கள் என் குடும்பத்தில் ஒருவர். இந்த படத்தில் பணி புரிந்த அனைத்து கலைஞர்களுக்கும், நடிகர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அன்பு தயாரிப்பாளர் எஸ்.பி.ஆர் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு அவருடன் அடுத்த படத்தில் நானும் இணைய வாய்ப்புள்ளது. எப்பவும் விஷயம் தெரிஞ்ச ஒரு ஆள் உள்ளே இருக்கிறது நல்லது, நமக்கு வேலை மிச்சம். 

என் தொழில் கூட அப்படித்தான். நான் உருவாக்கினேனே தவிர இதுவரைக்கும் நான் போனது கிடையாது. ஒரு சில கடைகள் திறப்பு விழாவுக்கு நான் போனது கிடையாது. இதுவரைக்கும் நான் கல்லால உக்காந்து காசு வாங்குனது இல்ல. தொழில நம்பி ஒருத்தர் கிட்ட கொடுத்துட்டு தட்டி கொடுத்தோம்னா அவங்க சூப்பரா பாத்துப்பாங்க. நான் ஒரு கடையில உட்கார்ந்தா ஒரு கடையோட போயிடுவேன். அந்த காலத்துல கஸ்டமர் ஒரு பிரச்சனைனா முதலாளிகள் பெல் அடிப்பாங்க, அவங்க கூப்பிட்டு சொன்ன பிறகு தான் பிரச்சனையை தீர்க்கணும்.

அந்த வழியை நான் எடுக்கவே இல்ல. எல்லாருமே முதலாளிகள் தான், நீங்க முதலாளியா இருந்துக்கோங்க நான் வேலைக்காரனா இருந்துக்குறேன்னு எல்லாத்தையும் அவங்க கிட்ட கொடுத்துட்டேன். நான் இங்க கரை இல்லாத வெள்ளை சட்டியில் இருக்க காரணம் அங்க கரை படிந்த தொழிலாளிகள் உழைச்சு வாழ வச்சுட்டு இருக்காங்க. 

ரூ. 2,100 சம்பளம் வாங்கின சூப்பர் ஸ்டார் இன்று உச்சத்தில் இருக்கிறார் என்றால் அவருக்கென சூப்பர் ஸ்டார் என ஒரு இசை அமைத்தவர் அண்ணன் தேவா அவர்கள் தான். அதை ரஜினி சார் மறக்கவே மாட்டார். எத்தனையோ இசையமைப்பாளர்களை பார்த்த ரஜினி சாரே தேவா அவர்களை வியந்து போய் மனதார பாராட்டினார்.

அப்படிப்பட்ட தேவா சாரின் ஆசிர்வாதத்தை தயாரிப்பாளர் எஸ்.பி.ஆர் பெற்றுள்ளார். வெற்றிக்காக நாம் முயற்சி செய்கிறோம். அது கிடைக்கும், கிடைக்காமல் போகும். ஆனால் உடலையும், மனதையும் திடகாத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

நான் எப்படி 9 வயதில் டீ கிளாஸ் கழுவினேனோ, அதுபோல எம்ஜிஆர் 10 வயதில் நாடகத் தொழிலுக்கு வந்தவர். அவர் உடலையும் மனதையும் திடக்காத்திரமாக வைத்திருந்ததால் தான் வெற்றி பெற்றார். 

உங்களுக்கெல்லாம் வயசு இருக்குது, நீங்க எதுக்கும் சோர்ந்து விடக்கூடாது. இன்னைக்கு 25 வயதுக்குள் வரும் இயக்குநர்கள் படம் ஓடவில்லை என்றால் எந்த இடத்திலும் மனதை விட்டுடாதீங்க. உங்க உடம்பையும், உற்சாகத்தையும், உள்ளத்தையும் நல்லா வச்சுக்கோங்க. என்னைக்கு இருந்தாலும் வெற்றி பெறுவோம். உங்கள் முயற்சியை விட்டு விட்டால் வெற்றி பெற முடியாது. முயற்சி தான் நம்முடைய முதல் முதலீடு. உடல் மற்றும் உள்ளத்தை என்றும் துவண்ட விடக்கூடாது. 

இந்த மைக் முன்னாடி நிற்கும் 4வது படித்த தமிழ்ச்செல்வன் எத்தனை ஓட்டலில் க்ளீனராக வேலை பார்த்திருப்பேன். இன்னைக்கு இந்த இடத்தில் இருக்கிறேன். தாய் தந்தை இல்லாம, படிப்பறிவு இல்லாம, பசியும் பட்டினமாக இந்த நிலைக்கு உயர்ந்திருக்கேன். இதெல்லாம் சொல்வது தன்னம்பிக்கை வளர்த்துக் கொள்வதற்காக.

நான் கிளீனரா வேலை செய்யும் போது கல்யாண விருந்து எச்சி இலையை கீழ கொட்டும்போது அதை உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் ஒரு குடும்பம் உட்கார்ந்து வழித்து சாப்பிடுவார்கள். என் மனசு பதறும், நான் குப்பை எடுத்து போற மாதிரி மீந்து பரோட்டா, தீஞ்சு போன தோசையெல்லாம் எடுத்துட்டு போய் கொடுப்பேன்" என உருக்கமாக பேசினார்.

மேலும் பேசிய அவர் "இப்படி இருந்த நாடு, இன்று எல்லாருக்கும் பிரியாணி காத்துட்டு இருக்கு. நம்ம தயாரிப்பாளர் கிட்ட எல்லாருக்கும் பிரியாணி, முட்டை, ஸ்வீட் போடலாம் என்று கேட்டேன் உடனே ஒத்துக்கிட்டாரு. நீங்க சொன்ன அளவு பத்துமா தெரியல அப்படின்னு சொல்லி இன்னும் 50 பிரியாணி கூடுதலா போடலாம்னு சொன்னதும் எதுவுமே யோசிக்காம சரின்னு சொல்லிட்டாரு. இது போன்ற அற்புதமான மனசுக்கு இந்த திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் சொல்லிக்கிறேன்" என ஆர்.ஆர் பிரியாணி கடை நிறுவனர் தமிழ்ச்செல்வன் பேசி உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Salem RR biryani tamilselvan speech in va varalam va audio launch


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->