Va Varalam Va | 'வா வரலாம் வா' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு!  - Seithipunal
Seithipunal


எஸ்.ஜி.எஸ். கிரியேட்டிவ் மீடியா எஸ்பிஆர் தயாரிக்கும் திரைப்படம் "வா வரலாம் வா". தயாரிப்பாளர் எஸ்பிஆர், இயக்குநர் எல்.ஜி. ரவிசந்தர் உடன் இணைந்து இப்படத்தை இயக்கியுள்ளார். 

இப்படத்தின் கதாநாயகனாக, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான பாலாஜி முருகதாஸ், முதன் முறையாக கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக கருமேகங்கள் கலைகின்றன படத்தில் நடித்த மஹானா சஞ்சீவி நடித்திருக்கிறார். இப்படத்தின் வில்லனாக "மைம்" கோபி நடிக்க, முதன்மையான கதாபாத்திரத்தில் ரெடின் கிங்ஸ்லீ, காயத்ரி ரேமா நடித்திருக்கின்றனர்.

இவர்களுடன் தீபா, வையாபுரி, வாசு விக்ரம், பயில்வான் ரங்கநாதன், போண்டா மணி, மீசை ராஜேந்திரன், கிரேன் மனோகர், ரஞ்சன், திலீபன், பிரபாகரன், யோகி ராமசாமி, வடிவேல் பீட்டர் உள்ளிட்ட மேலும் பல பிரபல நடிகர்கள் உட்பட 40 குழந்தைகளும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இசையமைப்பாளராக தேனிசைத்தென்றல் தேவா, ஒளிப்பதிவாளராக கார்த்திக் ராஜா, எடிட்டராக ராஜா முகமது, நடன இயக்குநராக நோபல், சண்டை பயிற்சியாளராக இளங்கோ என திரைத்துறையில் சாதித்த தொழில்நுட்ப கலைஞர்களே இப்படத்தில் பணியாற்றி உள்ளனர்.அண்மையில் 'வா வரலாம் வா' படத்தின் First Look வெளியான நிலையில், தற்போது முக்கிய அப்டேட் ஒன்றை படத்தின் தயாரிப்பு நிறுவனம் எஸ்.ஜி.எஸ். கிரியேட்டிவ் மீடியா வெளியிட்டுள்ளது. 

அதன்படி, இன்று மாலை 7.03 மணிக்கு "வா வரலாம் வா" திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Va Varalam Va movie release date announce


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->