Va Varalam Va | தம்பி உடையான் படைக்கு அஞ்சான்! தேவா குறித்து "வா வரலாம் வா" தயாரிப்பாளர் கலகலப்பு பேச்சு! - Seithipunal
Seithipunal


பிக்பாஸ் புகழ் பாலாஜி முருகதாஸ் நடிப்பில் எஸ்.ஜி.எஸ் கிரியேட்டிவ் மீடியா சார்பில் எஸ்.பி.ஆர் தயாரிப்பில் வரும் டிசம்பர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள வா வரலாம் வா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த நவம்பர் 15ம் தேதி சென்னையில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க நிர்வாகிகள், தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், இயக்குநர்கள், ஆர்.ஆர் பிரியாணி கடை நிறுவனர் தமிழ்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த விழா மேடையில் வா வரலாம் வா திரைப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.பி.ஆர் பேசியதாவது "என் தாய்த்தமிழ் உறவுகளுக்கும், தாய்த்தமிழ் பற்றாளர்களுக்கும் முதற்கண் வணக்கம். கைதட்டி உற்சாகப்படுத்தியோருக்கு நன்றி. முதன் முதலாக திரைத்துறையில் இது எனது கன்னிப்பேச்சு. பத்திரிகையாளர்கள் என்னை மறந்துவிடக்கூடாது. அதனால் பத்திரிகையாளர்களுக்கு முதற்கண் வணக்கம், நன்றியை தெரிவிக்கிறேன்.

தேரை நாங்கள் தயார் செய்து வைத்திருக்கிறோம். அதனை உலாவாக கொண்டு சென்று மீண்டும் கொண்டு வருவது நீங்கள்தான். அதனை நீங்கள் செய்வீர்கள் என எதிர்பார்க்கிறேன். முழு தேருக்கு என்னென்ன தேவையோ, அதனையெல்லாம் தயார் செய்து வைத்துள்ளேன். நீங்கள்தான் அதனை சிறப்பான உலாவாக மாற்றித்தர வேண்டும்.

வா வரலாம் வா உங்களுக்கு திரைப்படமாக இருப்பினும், எனக்கு பள்ளிக்கூடம். ஏனெனில், அ முதல் ஃ வரை படிக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதனை படித்தேன், தெரிந்துகொண்டேன். தற்போது எங்களின் 100% உழைப்பை கொடுத்திருப்பினும், அடுத்த படத்தில் இன்னும் உழைப்பை அதிகப்படுத்த தயாராக இருக்கிறோம். இவ்விழாவுக்கு வருகை தந்துள்ள இயக்குனர் எல்.ஜி ரவிச்சந்தர், அவருடன் பணியாற்றிய உதவிய இயக்குனர்கள், எடிட்டர் ராஜா முகமது, கேமரா மேன் கார்த்திக் ராஜா உள்ளிட்ட அனைவர்க்கும் வணக்கம். இவ்விழாவின் நாயகன் எங்கள் ஓம் சக்தி தேவாவே அடுத்த படத்திற்கும் இசையமைப்பார்.

எனது அடுத்த படத்தின் கேமரா மேன், இயக்குனர், கதாநாயகன்-கதாநாயகி, நடன இயக்குனர் என அனைவரும் இதே மேடையில் இருக்கிறார்கள். சேலம் ஆர்.ஆர் - எஸ்.பி.ஆர் இணைந்து அடுத்த படத்தை தயாரிக்கவுள்ளோம். இதனை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன். தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்பதைப்போல, தேவா சார் ஒரே நேரத்தில் 20 படங்கள் இசையமைத்து வழங்கியுள்ளார்.

தேவா சார் தம்பி உடையான் படத்திற்கு அஞ்சான். எவ்வுளவு படம் வந்தாலும் சிறப்பாக இசையமைத்து கொடுப்பார். இன்று முதல் தேவா ரிட்டன்ஸ் என்றும் கூறலாம். தேவா சாரை பொறுத்தமட்டில், எப்போதும் கம்போசிங் முடித்து காபி குடிப்பார். இயக்குனருடன் நாங்கள் டீ குடிக்கும் நேரத்தில் பாடல் தயாராகிவிடும். 15 நிமிடத்தில் ஒவ்வொரு பாடலும் முடிந்துவிடும். ஓம்சக்தி என கூறுவார், சரஸ்வதியாக வருவார்கள். சுரேஷ் கிருஷ்ணா கூறுகையில், 90% பல்லவியை முடித்துவிடுவோம் என கூறுவார். இன்று 100% அனைத்தும் முடிந்துவிட்டது. என்னைப்போல பிற தயாரிப்பாளர்களும் தேவாவை உபயோகித்து பெருமைப்பட வேண்டும்.

இப்படத்தில் உள்ள பாடல்கள் மக்களுக்கும், குழந்தைகளுக்கும் தேவையானது என்ன என்பதை புரிந்துகொண்ட பாடல் வரிகளாக கொடுத்துள்ளோம். "பரீட்சசையில் பெயிலானால் முயற்சியை பண்ணு, வாழ்க்கையில் ஒருநாள் நீதாண்டா விண்ணு" என அர்த்தமுள்ள வரிகள் இணைக்கப்பட்டுள்ளன. இன்றுள்ள குழந்தைகள் படிக்கிறார்கள், தோல்வியடைந்தால் மனமுடைந்து உயிரை மாய்கிறார்கள். அதனை மனதில் வைத்தே பாடல் வரிகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்படம் வெற்றிப்படமாக அமைய ஊடக நண்பர்கள் உதவ வேண்டும்" என பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Va Varalam Va producer SPR talks about music director Deva


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->