ஹாப்பி பர்த்டே "புஷ்பா"..!! "நடிகர் அல்லு அர்ஜுனை" வாழ்த்திய டேவிட் வார்னர்..!! - Seithipunal
Seithipunal


தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சுகுமார் இயக்கிய புஷ்பா திரைப்படம் வெளியாகி உலக அளவில் நல்ல வரவேற்பை பெற்றது. செம்மரக் கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார்.

புஷ்பா திரைப்படம் 5 மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகி அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பு பெற்று ஹிட் ஆனது. இந்த திரைப்படத்தில் தேவி ஸ்ரீ பிரகாஷின் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றன. குறிப்பாக ஸ்ரீ வள்ளி,ஊ சொல்றியா மாமா ஆகிய பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பி உலக அளவில் ஹிட்டானது.

புஷ்பா திரைப்படத்தில் ஸ்ரீவள்ளி பாட்டில் அல்லு அர்ஜுன் நடப்பது போன்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் நடித்து அவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில் இன்று அல்லு அர்ஜுனன் தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு நேற்று மாலை புஷ்பா2 திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் தனது குழந்தையுடன் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

David Warner wishes actor Allu Arjun on his birthday


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->