இஸ்ரோவின் அடுத்த சம்பவம்! நிலவில் 30-40 செ.மீ நகர்ந்த விக்ரம்! சோதனை வெற்றி!
ISRO has released vikram lander landing video on moon
நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து விக்ரம் லேண்டரில் இருந்து நிலவில் கால் பதித்த பிரக்யான் ரோவர் கடந்த 2 வாரங்களாக நிலவின் மேற்பரப்பில் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டது.
இந்த நிலையில் நிலவின் தென்பெருவத்தில் அடுத்த 14 நாட்களுக்கு சூரிய ஒளி படாது என்பதால் பிரக்னன் ரோவர் தனது பணியை நிறுத்தியது. மேலும் இரண்டு வாரங்களுக்கு பிறகு ஆய்வுப் பணி நடக்கும்போது மீண்டும் அதற்கு உயிரூட்டப்படலாம். இல்லையெனில் பிரக்யான் ரோவர் இந்தியாவின் நிலவுத் தூதனாக அங்கேயே இருக்கும் என இஸ்ரோ அறிவித்திருந்தது.
நிலவின் மேற்பரப்பில் பாறைகளையும் பள்ளங்களையும் சுற்றிவந்த பிரக்யான் ரோவர் 100 மீட்டர் (330 அடி) பயணம் செய்துள்ளதாக இஸ்ரோ அறிவித்திருந்தது. மேலும் பிரக்யான் ரோவர் தனது ஆய்வு பணியின் போது நிலவில் கந்தகம், இரும்பு உள்ளிட்ட கனிமங்கள் இருப்பதையும் பிராணவாயு இருப்பதையும் அது உறுதிசெய்தது.
இந்த நிலையில் விக்ரம் வேந்தர் நிலவில்தரையிறங்கும் போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது இஸ்ரோ வெளியிட்டுள்ளது. இஸ்ரோ தனது சமூக வலைதள பக்கத்தில் "சந்திரயான்-3 பணி: நிலவில் உள்ள சந்திராயன் 3ன் விக்ரம் லேண்டரை மீண்டும் மேலே எழுப்பி தரையிறக்கிய சோதனை வெற்றி பெற்றுள்ளது.
விக்ரம் லேண்டர் தரையில் இந்திய பகுதியிலிருந்து இஸ்ரோவின் கட்டளையின் இயந்திரங்களை எதிர்பார்த்தபடி இயக்கிய தன்னை சுமார் 40 செமீ உயர்த்தி ஏற்கனவே தரையிறங்கிய பகுதியில் இருந்து சுமார் 30 - 40 செமீ தொலைவிற்கு நகர்ந்து பாதுகாப்பாக தரையிறங்கியது.
இந்த 'கிக்-ஸ்டார்ட்' திட்டம் எதிர்காலத்தில் மனிதனை நிலவுக்கு அனுப்புவது மற்றும் திரும்ப பூமிக்கு வருவது குறித்தான முன்மாதிரியாக அமைந்துள்ளது. அனைத்து அமைப்புகளும் சிறந்த வகையில் செயல்படுகின்றன. அதன்படி ராம்ப், ChaSTE மற்றும் ILSA ஆகியவை மீண்டும் மடித்து சோதனைக்குப் பிறகு வெற்றிகரமாக மீண்டும் பயன்படுத்தப்பட்டன" என இஸ்ரோ தரையிறங்கும் வீடியோவுடன் பதிவிட்டுள்ளது.
English Summary
ISRO has released vikram lander landing video on moon