கொடநாடு கொள்ளை, கொலை வழக்கில் அதிரடி திருப்பங்கள்! சிக்கலில் இபிஎஸ்?! வெளியான வீடியோ!  - Seithipunal
Seithipunal


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் கொடநாடு இல்லத்தில் நடைபெற்ற கொள்ளை, கொலை குறித்து புலனாய்வு வீடியோ ஒன்றினை புலனாய்வு பத்திரிக்கை ஆசிரியர் சாமுவேல் மேத்யூஸ் வெளியிட்டுள்ளது புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

டெல்லியில் இன்று மதியம் 3 மணியளவில் பத்திரிக்கையாளர்களை சாமுவேல் மேத்யூஸ் சந்தித்தார். அப்போது அவர் உருவாக்கிய ஜெயலலிதாவிய கொடநாடு மரணங்கள் தொடர்பான புலனாய்வு வீடியோவை வெளியிட்டார். அந்த காணொலியில் கோடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளைகள் குறித்தும் அதன்பிறகு நடைபெற்ற ஜெயலலிதா வாகன ஓட்டுனரின் மரணம் உள்ளிட்டவை குறித்து தெரிவிக்கப்பட்டு உள்ளது.

2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கோடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தின் போது காவலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விவரங்களும், அந்த காணொலியில் இடம்பெற்றுள்ளன. மேலும், கோடநாடு எஸ்டேட்டில், 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நகை, பணம் இருந்ததாகவும், அதிமுகவின் கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என அனைவரிடமும் வாங்கப்பட்ட மன்னிப்பு கடிதங்கள் இருந்ததாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடநாட்டில் கொள்ளை நடந்த போது அதில் ஈடுபட்ட கனகராஜ் யாருக்காக இதை செய்தார்? என்றும், இந்த கொள்ளை சம்பவத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சில முக்கிய அரசியல் பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் சாமுவேல் மேத்யூஸ் தனது ஆவணப் படத்தில் காட்டியுள்ளார். அந்த முக்கிய அரசியல்வாதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான் என்ற தகவலும் வேகமாக பரவி வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

mathews samuel released documentary film about kodanad estate robbery


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->