மீண்டும்... மீண்டுமா...!!! 3 -வது சுற்று கோடை மழை பெய்ய வாய்ப்புள்ளது!- இந்திய வானிலை ஆய்வு மையம்
3rd round summer rains likely India Meteorological Department
தமிழகத்தில் தற்போது கோடை மழை பெய்ய தொடங்கி இருக்கிறது. இதில் கடந்த 3-ந்தேதி முதல் 2-வது சுற்று கோடை மழை பெய்து வருகிறது.

இந்தச் சூழலில், இடையில் சிறிய இடைவெளிவிட்டு, பின்னர் 3-வது சுற்று கோடை மழை தொடங்குவதற்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், 'தெற்கு வங்க கடலின் மத்திய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது' என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை அதாவது 8-ம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளையும், அதற்கடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளை அடைய கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குறைந்த காற்றழுத்தம் காரணமாக தமிழ்நாட்டில் நாளை முதல் மேலும் ஒரு வாரத்துக்கு மழை தொடர்ந்து பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English Summary
3rd round summer rains likely India Meteorological Department