மீனவர்களே எச்சரிக்கை..யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம்!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் ஃபெயிலின் தாக்கம் குறைந்து தற்போது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. தஞ்சாவூர், மதுரை நாகப்பட்டினம், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது. அடுத்த மூன்று நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

 இந்த நிலையில், இந்திய வானிலை மையத்தின் எச்சரிக்கை படி, வங்காள விரிகுடா மற்றும் கன்னியாகுமரி கடல் பகுதியில் காற்றானது 40 - 45கீ. மி வேகம் வரை அதிகபட்சமாக 55 கிலோ மீட்டர் வரை காற்று வீச கூடும் என்பதால் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளது. எனவே திருநெல்வேலி மாவட்ட மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Attention fishermen no one go to the sea


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->