அதிதீவிர புயலாக மாறிய பிபோர்ஜாய்.. வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!
Biborjai has turned into a very intense storm
தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில் கடந்த ஜூன் 6ம் தேதி அதிகாலை காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டிருந்த நிலையில் புயலாக மாறியது. இந்த புயலுக்கு வங்கதேசம் 'பிபோர்ஜோய்' என பெயர் சூட்டியது. இந்த புயலின் காரணமாக கேரளா முதல் மகாராஷ்டிரா மாநிலம் வரை உள்ள மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் மழை தீவிரமடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.
கேரளாவின் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, கோழிக்கோடு மற்றும் கண்ணூர் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் பிபோர்ஜாய் புயலானது புயலில் இருந்து அதிதீவிர புயலாக மாறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்து. இந்த நிலையில் தற்போது அதிதீவிர புயலாக மாறி மணிக்கு 5 கிலோ மீட்டர் வேகத்தில் இருந்து தற்பொழுது மணிக்கு 9 கிலோமீட்டர் வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து செல்கிறது.
பிபோர்ஜாய் புயல் மும்பைக்கு சுமார் 600 கிலோமீட்டர் மேற்கிலும், கராச்சிக்கு தெற்கே 830 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக குஜராத் மாநிலத்தில் உள்ள பிரபல திதால் கடற்கரை முன் எச்சரிக்கை காரணமாக ஜூலை 14-ந்தேதி வரை மூடப்பட்டுள்ளது. இந்த அதிதீவிர புயல் வடக்கு நோக்கி நகர்ந்து ஜூன் 15 ம் தேதி பிற்பகலில் பாகிஸ்தான் மற்றும் அதை ஒட்டிய சவுராஷ்டிரா மற்றும் கட்ச் கடற்கரைகளை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
English Summary
Biborjai has turned into a very intense storm