"பிபோர்ஜாய் புயல்" வரும் 15-ந்தேதி கரையை கடக்கும் - இந்திய வானிலை மையம் தகவல் - Seithipunal
Seithipunal


தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில் உருவான "பிபோர்ஜோய் புயல்" அடுத்த 6 மணி நேரத்தில் தீவிர சூறாவளி புயலாக வலுப்பெற உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மணிக்கு 5 கிலோ மீட்டர் வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து வரும் பிபோர்ஜோய் புயல் மும்பைக்கு சுமார் 600 கிலோமீட்டர் மேற்கிலும், கராச்சிக்கு தெற்கே 830 கிலோமீட்டர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளது.

இதையடுத்து புயலானது வடக்கு நோக்கி நகர்ந்து ஜூன் 15 ந்தேதி பிற்பகலில் பாகிஸ்தான் மற்றும் அதை ஒட்டிய சவுராஷ்டிரா மற்றும் கட்ச் கடற்கரைகளை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் கர்நாடகா, கோவா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு அதிகனமழையும், பலத்த காற்றும் வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cyclone biborjai to make landfall on 15th


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->