தமிழகத்தில் கொளுத்த போகும் வெளியில் - வானிலை மையம் எச்சரிக்கை.!
heat increase in tamilnadu
தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பநிலையானது வழக்கத்தை விட அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிள்ளதாவது:-
நாளை முதல் முதல் பிப்ரவரி 21ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை நேரத்தில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸையாகவும் இருக்கும்.
கடந்த சில நாட்களாகவே சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை நேரங்களில் வெப்பநிலை அதிகரித்து காணப்படுவதாகவும், மீனவர்களுக்கு எந்தவொரு எச்சரிக்கையும் இல்லை" என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English Summary
heat increase in tamilnadu