இன்னும் இரண்டு நாட்களே உள்ளது! தமிழக மக்களே உஷார்! இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


வடகிழக்கு பருவமழை கடந்த இரண்டு நாட்களாக சற்று குறைந்துள்ள நிலையில் இன்று காலை தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

அதில் தென்கிழக்கு வங்க கடலில் அந்தமான் கடற் பகுதியை ஒட்டி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தெற்கு வங்கக்கடல் பகுதியில் 19ஆம் தேதி வாக்கில் வலுபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வரும் 20ம் தேதி முதல் மேற்கு-வடமேற்கு திசையில் வடதமிழகம், புதுவை மற்றும் தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதன் காரணமாக இன்றும் மற்றும் நாளை தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 19ஆம் தேதி கடலோர தமிழக மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் உள் தமிழக மாவட்டங்களில் ஓரின இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

அதனைத் தொடர்ந்து வரும் 20ம் தேதி கடலோர தமிழக மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், காரைக்கால், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

அதேபோன்று வரும் 21ஆம் தேதி வட தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களிலும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் இடி மின்னலன் கூடிய மீதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் எனவும், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யவும் வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IMD announced heavy rains may occur across Tamil Nadu


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->