மிக தீவிர புயலாக வலுவடையும் பிபோர்ஜோய் - வானிலை மையம் தகவல்.! - Seithipunal
Seithipunal


மிக தீவிர புயலாக வலுவடையும் பிபோர்ஜோய் - வானிலை மையம் தகவல்.!

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டிருந்தது. இந்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று, அதற்கு 'பிபோர்ஜோய்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் பெயரை வங்கதேசம் வழங்கியுள்ளது. இதற்கு ஆபத்து என்பது பொருளாகும். 

இந்த புயல் வடக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது என்றும், இதனால் கேரளா முதல் மகாராஷ்டிரா மாநிலம் வரையிலான நாட்டின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் மழை தீவிரமடையும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆனால், 'பிபோர்ஜோய்' புயல், மேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த இருபத்து நான்கு மணி நேரத்தில் தீவிர புயலாக வலுவடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. 

இந்த நிலையில், "பிபோர்ஜோய்" புயல் தற்போது மிக தீவிர புயலாக வலுவடைந்துள்ளது. இது அடுத்த மூன்று நாட்களில் வடக்கு நோக்கி நகரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

meteorological center info Biborjoi to strengthen into a very intense storm


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->