பருவமழை : தமிழகத்தில் வழக்கத்தை விட 'அதிகமான' மழைப்பொழிவு பதிவு - வானிலை ஆய்வு மையம் தகவல் ..!!
Meteorological Department Says More than Normal Rainfall in Tamilnadu
தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை வழக்கத்தை விட இந்த ஆண்டு அதிகளவில் பொழிந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக கர்நாடகா, கேரளா, மற்றும் பல வடகிழக்கு மாநிலங்களில் விடாது கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்திலும் தற்போது தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது.
தென்மேற்குப் பருவமழை தமிழகத்திலும் தீவிரமடைந்துள்ளதால் நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருகிறது. மேலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மாலை மற்றும் இரவு வேளைகளில் மட்டும் பரவலாக மழை பெய்து வருகிறது.
வழக்கமாக தென்மேற்குப் பருவமழையின் மூலம் கன்னியாகுமரி, தேனி, கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்கள் அதிக மழைப் பொழிவைப் பெறும். அதன்படி கடந்த ஜூன் 1ம் தேதி முதல் இன்று ஜூலை 18ம் தேதி வரை நிலவரத்தின் படி, தமிழகம் முழுவதும் 160.6 மி. மீ மழை பதிவாகியுள்ளது.
வழக்கமாக இந்த காலகட்டத்தில் தமிழகத்தில் 85.5 மி. மீ மழை தான் சராசரியாகப் பெய்யும். ஆனால் இந்த ஆண்டு மேற்குறிப்பிட்டுள்ள காலத்தில் இதுவரை 88 சதவீத மழை பதிவாகியுள்ளது" என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்மேற்குப் பருவமழைக் காலம் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Meteorological Department Says More than Normal Rainfall in Tamilnadu