வங்கக் கடலில் உருவாகிறது மிதிலி புயல் - தமிழகத்திற்கு பாதிப்பா?
mithili cyclone form bay of bangal
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின்xcx பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இதற்கிடையில், வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுவடைந்து வடக்கு- வடகிழக்கு திசையில் நகர்ந்து வருகிற 18 ந்தேதி வங்கதேசம் அருகே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்த நிலையில், வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் புயலாக மாற வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. அப்படி புயலாக மாறினால், அதற்கு மாலத்தீவுகள் பரிந்துரைத்த 'மிதிலி' என்று பெயரிடப்படும். மேலும், இந்த புயலானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுவிழந்து வங்கதேசம் அருகே கரையை கடக்கும்.
இதற்கு முன்னதாக வங்கக்கடலில் கடந்த மே மாதம் "மேக்கா" புயலும், அக்டோபர் மாதம் "ஹாமூன்" புயலும் உருவான நிலையில், தற்போது உருவாகும் மிதிலி புயல் நடப்பாண்டில் உருவாகும் மூன்றாவது புயலாக இருக்கும். தமிழகத்தை பொறுத்தவரை, அடுத்த ஐந்து நாட்களுக்கு மழைக்கு வாய்ப்pu உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English Summary
mithili cyclone form bay of bangal