நீலகிரி கனமழை : அவலாஞ்சியில் அதிகபட்ச மழைப் பதிவு - முகாமிட்டுள்ள பேரிடர் மீட்புப் படை..!! - Seithipunal
Seithipunal



நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 34 செ. மீ மழை பெய்துள்ளது. மேலும் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு அசம்பாவிதம் ஏற்பட்டால் மீட்புப் பணிக்கு தயாராக நீலகிரி மாவட்டத்தில் பேரிடர் மீட்புப் படையினர் முகாமிட்டுள்ளனர். 


நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர், பந்தலூர், தேவாலா, கோத்தகிரி, பாடந்தொரை, சேரங்கோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முழுவதும் பலத்த மழை பெய்தது. குறிப்பாக அவலாஞ்சியில் 34 செ. மீ மழை பதிவாகியுள்ளது. இதையடுத்து அப்பர்பவானியில் 21 செ. மீ அளவுக்கு மழை பெய்துள்ளது. 

மேலும் பல இடங்களில் நேற்று ஒரே நாளில் 10 செ. மீ க்கும் அதிகமான மழை பெய்துள்ளது. இதன் காரணமாக நீலகியில் பல்வேறு பகுதிகளில் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியதில் பல ஏக்கர் அளவில் பயிரிடப்பட்டிருந்த கேரட் முழுவதுமாக சேதமடைந்துள்ளது. குறிப்பாக லாரன்ஸ் மற்றும் கப்பத்துரை ஆகிய பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் முழுவதுமாக நீரில் மூழ்கியுள்ளன. 

இந்நிலையில் நீலகிரி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கையாக தலா 10 வீரர்கள் அடங்கிய தமிழ்நாடு பேரிடர் மீட்புக் குழுவினர் மாவட்டத்தின் 4 இடங்களில் முகாமிட்டு உள்ளனர். 

அந்த வகையில் உதகை, மஞ்சூர், தேவாலா, கூடலூர் ஆகிய 4 இடங்களில் முகாமிட்டுள்ள பேரிடர் மீட்புப் படையினர் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் உடனடியாக மீட்புப் பணிகளில் ஈடுபடும் வகையில் தயாராக உள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rain Disaster Responce Force Camp in Nilgiris Due to Heavy Rain


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->