தமிழகத்தில் இன்று ஆரஞ்சு எச்சரிக்கை! 25 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை!
Tamilnadu Weather Report Heavy Rain Alert November 1 orange alert
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, இன்று தமிழ்நாட்டின் 25 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும், இன்று திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளை 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
நவம்பர் 3ஆம் தேதி தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும், நவம்பர் 4ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. நகரின் அதிகபட்ச வெப்பநிலை 33°C முதல் 34°C வரை இருக்கும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படவில்லை, ஆனால், நாளை மன்னார் வளைகுடா, குமரி கடல், மற்றும் அரபிக்கடலில் மணிக்கு 55 கிமீ வேகத்தில் சூறைக்காற்று வீசும் எனவும், மன்னார் வளைகுடா மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Tamilnadu Weather Report Heavy Rain Alert November 1 orange alert