மிக விரைவில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி!...இந்த 10 மாவட்டங்களில் இன்று வெளுக்கப்போது கனமழை!...வானிலை எச்சரிக்கை!
Very soon a low pressure area heavy rain in these 10 districts today weather warning
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் அக்டோபர் 15-ம் தேதி தொடங்கிய நிலையில், தற்போது தீவிர மடைந்து வருகிறது. இருந்த போதிலும், நடப்பு மாதம் தொடக்கத்தில் இருந்து கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மேலும் வட மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது
இதன் தொடர்ச்சியாக வட மாவட்டங்களில் மழை தீவிரம் அடைய உள்ளது. அதன்படி, நாளை மறுநாள் அல்லது அதற்கு அடுத்த நாள் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை, திருப்பூர், விருதுநகர், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English Summary
Very soon a low pressure area heavy rain in these 10 districts today weather warning