15-ம் தேதி வரை என்ன நடக்கும்னு தெரியாது!...மாவட்ட ஆட்சியர்களுக்கு தீயாய் பறந்த உத்தரவு! - Seithipunal
Seithipunal


அரபிக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், இது காரணமாக திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
மேலும், சென்னையில் ஒரு வாரத்திற்கு மிதமான மழை பெய்யும் என்றும், வரும் 15-ம் தேதி கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், அதிகனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அந்த வகையில் பேரிடர்களை கையாள்வதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், கன முதல் மிக கனமழை பெய்யும் பட்சத்தில் அனைத்து மாவட்டங்களிலும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்வதோடு இயந்திரங்களை தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாவட்ட அளவில் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு, வருவாய் நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்கானி உத்தரவிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

We do not know what will happen till the 15th the district collectors have been ordered to fly


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->