'அசானி' புயல் || 85 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று., தமிழகத்தில் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!
weather report 20 march 2022
வடக்கு திசையில் அந்தமான் நிக்கோபார் தீவு அருகே 'அசானி' என்ற புயல் உருவாக்க உள்ளதாகவும், இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையின் சில பகுதிகளில் நாளை முதல் அடுத்த நான்கு நாள்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து இன்று வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது,
"தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது.
இது வடக்கு திசையில் அந்தமான் நிக்கோபார் தீவு வழியாக நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதனை அடுத்த 12 மணி நேரத்தில் புயலாகவும் வலுபெறக்கூடும்.
'அசானி' என்று இந்தப் புயலுக்கு பெயர் வைத்துள்ள வானிலை மையம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையின் சில பகுதிகளில் நாளை முதல் அடுத்த நான்கு நாள்களுக்கு மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக நாளையும் நாளை மறுநாளும் அந்தமான் கடல், மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 85 கிலோ மீட்டர் வேகம் வரை வீச வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
English Summary
weather report 20 march 2022