தமிழ்நாட்டில் 6 இடங்களில் சதம் அடித்த வெயில்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. ஒரு சில இடங்களில் பகல் நேரத்தில் வெயில் கொளுத்தினாலும் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் குளிரான சூழல் காணப்படுகிறது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் நேற்று 6 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி உள்ளது. வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் இரவு நேரங்களிலும் புழுக்கமான சூழல் நிலவுகிறது.

அதன்படி ஈரோட்டில் 103.28°F கரூர் பரமத்தி 102.2°F மதுரை விமான நிலையத்தில் 100.04°F சேலத்தில் 100.76°F கோவையில் 100.04°F திருச்சியில் 100.22°F என வெப்பநிலை பதிவாகியுள்ளது.

வருங்காலங்களில் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரிக்க கூடும் எனவும், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் 100°F தாண்டி வெயில் வாட்டி வதைக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியே செல்வதை தவிர்க்கமாறு முடிந்தவரை காலை 11:00 மணி முன்பும் மாலை 3:00 மணிக்கு பிறகும் வெளியில் செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Weather temperature crossed 100 deg Fahrenheitin tamilnadu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->