ரஷ்யா ட்ரோன் தாக்குதல்.! ஒடேசாவில் 1.5 மில்லியன் மக்கள் மின்சாரம் இல்லாமல் தவிப்பு.! - Seithipunal
Seithipunal


உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடர்ந்து 10 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இப்போரில் உக்ரைனுக்கு ஆதரவாக இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் நாடுகள் தொடர்ந்து உதவி வருகின்றன.

மேலும் ரஷ்யா படைகள் உக்ரைன் மீதான இரண்டாம் கட்ட தாக்குதலை தீவிரமாக நடத்தி வருகிறது. இதில் குறிப்பாக உக்ரைன் மக்களின் வாழ்வாதாரங்களை பாதிக்கும்படியாக தொழிற்சாலைகள் மற்றும் ஆற்றல் மூலங்களின் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்நிலையில் உக்ரைனின் அதிகளவு மக்கள் வசிக்கும் நகரமான ஒடேசா பகுதியில் மின்சாரம் உற்பத்தி செய்யும் 2 தளங்களின் மீது ரஷ்யா ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் 1.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மின்சாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒடேசாவில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் கணிசமாக குறைந்து இருப்பதாகவும், மின்சாரத்தை மீட்டெடுக்க பல நாட்கள் ஆகலாம் என்று அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். மேலும் இந்த தாக்குதல்,  ரஷ்யாவிற்கு ஈரானால் வழங்கப்பட்ட டிரான்கள் மூலம் நடத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

1 point 5 million people affected with power cut due to drone attack in odesa


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->