புர்கினோ பாசோவில் கண்ணிவெடியில் சிக்கிய மினி பஸ் - 10 பேர் பலி
10 died as minibus caught in landmine in burkino faso
ஆப்பிரிக்க நாடான புர்கினோ பாசோவில் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் அல் கொய்தா மற்றும் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய பயங்கரவாத குழுக்களுக்கும், ராணுவத்திற்கும் இடையே மோதல் நடைபெற்று வருகின்றன.
இந்த மோதலினால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர் மற்றும் 2 மில்லியன் மக்கள் அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இதனிடையே கடந்த ஆண்டு புர்கினோ பாசோவில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், பயங்கரவாதத்தை அடியோடு அழிப்போம் என்று சூளுரைத்தது. இருப்பினும் பயங்கரவாத தாக்குதல் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இந்நிலையில் புர்கினோ பாசோவின் கிழக்கு பகுதி மற்றும் நைஜர் நாட்டின் எல்லை பகுதியை ஒட்டி அமைந்துள்ள படா கவுமா மாகாணத்தில் மினி பஸ் சென்று கொண்டிருந்தது. அப்பொழுது எதிர்பாராத விதமாக கண்ணிவெடியில் மினி பஸ் சிக்கி வெடித்து சிதறியது.
இந்த விபத்தில் 10 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். 5 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பஸ்ஸில் சிலர் மாயமாகி உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. மேலும் இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு பயங்கரமாவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
English Summary
10 died as minibus caught in landmine in burkino faso