மெக்சிகோ: மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


மெக்சிகோவில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்து உள்ளனர்.

மெக்சிகோ குவானாஜூவலாடோ மாகாணத்தில் உள்ள சிறந்த தொழில் நகரமாக திகழும் தரிமோரோவில் உள்ள ஒரு அலுவலகத்தில் திடீரென புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த அவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இதைபார்த்த பலர் உயிருக்கு பயந்து அங்கிருந்து ஓட்டம் பிடித்த நிலையில், மர்ம நபர்கள் நடத்திய இந்த துப்பாக்கி சூட்டில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

இதையடுத்து இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்த தகவல் அறிந்து வந்த போலீசார், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

10 killed shooting in Mexico


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->