ஈகுவேடார்: சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் 10 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


ஈகுவேடார் சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் 10 பேர் உயிரிழந்து உள்ளனர்.

தென் அமெரிக்கா நாடான ஈகுவேடாரில் கடந்த சில மாதங்களாக சிறைச்சாலைகளில் வன்முறை சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன. இது போன்ற வன்முறைகளை தடுக்க அந்நாட்டு அரசு சிறைச்சாலையில் குழு அமைத்து தலைவர்களாக இருப்பவர்களை வேறு சிறைக்கு மாற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில் ஈகுவேடார் தலைநகர் குவிட்டோவில் உள்ள இன்கா சிறைச்சாலையில் இருந்து 3 முக்கிய கேங் லீடர்களை வேறு சிறைக்கு மாற்றும் பணி நடைபெற்றது. அப்போது கைதிகளுக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த ராணுவ வீரர்கள் கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக குவிட்டோ போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

10 people were killed in a clash between inmates in the Ecuador prison


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->