உக்ரைன் ராணுவத்தை பலப்படுத்த 10,000 தன்னார்வலர்களுக்கு ட்ரோன் பயிற்சி.! - Seithipunal
Seithipunal


உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் ஓராண்டிற்கும் மேலாக நடந்து வரும் நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ்வை கைப்பற்ற ரஷ்ய படைகள் கிழக்கு பகுதிகளில் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. இதைத்தொடர்ந்து உக்ரைனின் ராணுவத்தை பலப்படுத்த ட்ரோன் ராணுவத்தை உருவாக்க உக்ரைன் அரசு திட்டமிட்டது.

இந்த திட்டத்திற்காக நிதி திரட்டவும், டிரோன்களை வாங்கவும், 10,000 தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு டிரோன் பயிற்சி அளிக்கப்படவும் முடிவு செய்யப்பட்டது. இந்த திட்டம் தொடர்பாக உக்ரைனின் அறிவியல் தொழில்நுட்ப துறை மந்திரி மைக்கைலோ பெடோரோவ் கூறும்பொழுது, ட்ரோன் ராணுவம் திட்டத்திற்காக இதுவரை 325 மில்லியன் டாலர் நிதி திரட்டப்பட்டுள்ளதாகவும், ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலை சமாளிக்க 10000 தன்னார்வலர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் திறமையான 60 டிரோன் ஆபரேட்டர்களை உருவாக்கவும், அவர்கள் மூலம் மற்ற வீரர்களுக்கு ட்ரோன் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

10000 volunteers drone training in Ukraine


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->