தெற்கு சூடான்: வெடிகுண்டு வெடித்ததில் 11 சிறுவர்கள் பலி.!! - Seithipunal
Seithipunal


ஆப்பிரிக்க நாடான சூடானின் தலைநகர் ஜூபாவின் வடமேற்கிலுள்ள மேற்கு பஹ்ர் எல்-கசல் மாநிலத்தில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மண்ணில் புதைந்திருந்த வெடிகுண்டு வெடித்து சிதறியுள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 11 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் இரண்டு சிறுவர்கள் உயிருக்குபோராடிய நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக பாதுகாப்பு அதிகாரிகள் கூறும்பொழுது, கடந்த 2011ஆம் ஆண்டு சூடானிலிருந்து தெற்கு சூடான் விடுதலை பெற்ற பின்பு அரசுக்கும், ஆயுதமேந்திய போராட்ட குழுவிற்கும் இடையே ஐந்து ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெற்றது. போரினால் சுமார் 4,00000 பொதுமக்கள் உயிரிழந்த நிலையில், போரில் பயன்படுத்தப்பட்ட குண்டுகள் முழுமையாக அகற்றப்படாமல் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் குண்டுவெடிப்பு சார்பாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், அகற்றப்படாமல் இருக்கும் ஏராளமான கண்ணிவெடிகள் மற்றும் வெடிக்காத குண்டுகளால் ஒவ்வொரு ஆண்டும், ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்து வருவதாக தெரிவித்துள்ளது. இதனிடையே தெற்கு சூடானில் கடந்த ஆண்டு 40,121 கண்ணிவெடிகள், 76,879 கிளஸ்டர் குண்டுகள் மற்றும் பிற வெடிக்காத சாதனங்கள் உட்பட ஒரு மில்லியனுக்கும் அதிகமான வெடிபொருட்கள் கண்டுபிடித்து அழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

11 childrens died in explosion in south sudan


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->