அதிபர் ஜெலன்ஸ்கியின் சொந்த ஊரில் ரஷ்யா தாக்குதல் - 11 பேர் பலி - Seithipunal
Seithipunal


உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் கடந்தாண்டு தொடங்கி ஓராண்டுக்கும் மேலாக நடந்து வருகிறது. இந்த போரில் உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்றிய ரஷ்யப்படைகள் தற்போது அடுத்த நிலை நடவடிக்கையாக ட்ரோன்கள் மூலம் உக்ரைன் நகரங்களை தாக்கி வருகின்றன.

மேலும் உக்ரைன் படைகள் மேற்கத்திய நாடுகள் வழங்கிய வான் தடுப்புகள் மூலம் ரஷ்யாவின் ட்ரோன் தாக்குதலை சமாளித்து வருகின்றன. இந்நிலையில் நேற்று அதிகாலை உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் சொந்த ஊரான கிரைவி ரிஹ் பகுதியில் ஐந்து மாடி அடுக்குமாடி கட்டிடத்தின் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 28 பேர் படுகாயமடைந்துள்ளதாக இராணுவ நிர்வாகத்தின் தலைவர் ஒலெக்சாண்டர் வில்குல் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து ரஷ்ய கப்பலிருந்து ஏவப்பட்ட ஏவுகணை நகர கட்டிடங்களை தாக்கியதாக மாகாண கவர்னர் டினிபிரோ பெட்ரோவிஸ்க் தெரிவித்துள்ளார். மேலும் இடிபாடுகளில் சிக்கிய மக்களை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

இதனிடையே தீவிரவாதிகள் ஒருபோதும் மன்னிக்கப்பட மாட்டார்கள், ரஷ்ய படைகளால் ஏவப்படும் ஒவ்வொரு ஏவுகணைக்கும் அவர்களே பொறுப்பேற்கப்படுவார்கள் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

11 died as Ukraine president home town attacked by russia


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->