பாகிஸ்தானில் பயங்கர பனிச்சரிவு - சிறுவன் உட்பட 11 பேர் பலி - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானின் கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மிருடன் இணைக்கும் ஷான்டா் கணவாயை அருகே கால்நடைகளுடன் 35 பேர் முகாமிட்டிருந்தனர். அப்பொழுது எதிர்பாராத விதமாக திடீரென பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தகவல் அறிந்து விரைந்த பேரிடர் மீட்பு குழுவினர் இடிபாடுகள் மற்றும் மண்ணில் புதைந்தவர்களை மீட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பனிச்சரிவின்பொழுது அப்பகுதியில் கால்நடைகளுடன் முகாமிட்டிருந்த 35 பேரில் சிறுவன் உட்பட 11 பேர் மற்றும் 15க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பலர் பனி இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளதால், பலி எண்ணிக்கை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பேரிடர் மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே அளவுக்கு அதிகமான பனிச்சரிவின் அழுத்தத்தினால் நிலச்சரிவு தூண்டப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

11 killed in Avalanche in Pakistan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->