அமெரிக்க மாகாணங்களை தாக்கிய சூறாவளி - 13 பேர் பலி - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் மத்திய மற்றும் தெற்கு மாகாணங்கள் கடந்த மூன்று மாதங்களாக பனிப்புயல் மற்றும் சூறாவளியால் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் தெற்கு மாகாணங்களான கென்டக்கி, அலபாமா, கலிபோர்னியா, டென்னிஸ், ஓஹியோ, பென்சில்வேனியா மற்றும் மேற்கு வர்ஜீனியா மிசிசிப்பி பகுதிகளை சூறாவளி கடுமையாக தாக்கியுள்ளது.

இதில் மணிக்கு 130 கி.மீ வேகத்தில் காற்று வீசியதால் நூற்றுக்கணக்கான மின் கம்பங்கள் மற்றும் மரங்கள் வேரோடு சாய்ந்தன. கடைகள் மற்றும் வீடுகளின் மேற்கூரைகள் தூக்கி எறியப்பட்டன. மேலும் சூறாவளியை தொடர்ந்து பனிப்பொழிவு அதிகம் காணப்பட்டதால் சாலைகள் மற்றும் வீடுகளை மூன்று அங்குலம் வரை உறைபணி சூழ்ந்தது. இதனால் சாலை போக்குவரத்து பெரும்பாலான இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சூறாவளியால்.இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 1.2 மில்லியன் மக்கள் மின்தடையால் இருளில் மூழ்கியுள்ளனர். சூறாவளியின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்பதால் 13 மாகாணங்களுக்கு அவசரநிலை பிறப்பிக்கப்பட்டு மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

13 died as Cyclone ravages provinces in america


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->