கஜகஸ்தானில் பயங்கர காட்டுத்தீ: 60,000 ஹெக்டேர் நிலப்பகுதி நாசம்..! 14 பேர் பலி..! - Seithipunal
Seithipunal


மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானின் அபாய் மாகாணத்திலுள்ள பட்யபவப்ஸ்கை வனப்பகுதியில் கடந்த வியாழக்கிழமை பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டு வேகமாக பரவத் தொடங்கியது. மேலும் வனப்பகுதியின் தெற்கு பகுதியில் கட்டுக்கடங்காமல் பரவிய காட்டுத்தீ சுமார் 60,000 ஹெக்டேர் நிலப் பகுதியை எரித்து நாசமாக்கியுள்ளது.

இதைத்தொடர்ந்து வனப்பகுதியில் வேகமாக பரவி வரும் தீயை கட்டுப்படுத்த 1000க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் 20 தீயணைப்பு வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பேரிடர் மீட்பு குழுவினர் வனப்பகுதியில் சிக்கியவர்களை மீட்டு பாதுகாப்பாக வெளியேற்றி வருகின்றனர்.

இந்நிலையில் காட்டுத்தீயால் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 600 குடியிருப்பாளர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இரண்டு முறை மின்னல் தாக்கியதே காட்டுத்தீ பற்றியதற்கான காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அதிக வெப்பநிலை மற்றும் காற்றின் வேகம் அதிகமாக இருந்த போதிலும் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அவசரகால தீயணைப்பு சேவை குழுவின் தலைவர் நூர்போலாட் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

14 died and 60000 hectares destroyed due to wild fire in Kazakhstan


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->