14 மில்லியன் மக்கள் இடம்பெயர்வு - ஐ.நாவில் வெளியான அதிர்ச்சி தகவல்.! - Seithipunal
Seithipunal


நேற்று நடைபெற்ற ஐ.நா. கூட்டத்தில் உலகம் முழுவதும் பத்து கோடிக்கும் மேற்பட்டோர் அகதிகளாக இருப்பதாக ஐ.நா. அகதிகளுக்கான உயர் ஆணையர் பிலிப்போ கிராண்டி கவலை தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, அந்தக்கூட்டத்தில் பிலிப்போ கிராண்டி பேசியதாவது, 

கடந்த பிப்ரவரி மாதம் முதல் ரஷ்யா, உக்ரைனுக்கு இடையே போர் தொடங்கப்பட்டதிலிருந்து, இதுவரை 14 மில்லியன் உக்ரேனிய மக்கள் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர். கடந்த ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் இடம்பெயர்வு நடப்பது இதுவே முதல்முறை ஆகும். 

இதையடுத்து,  இந்த ஆண்டு உக்ரேனிய மக்கள் உலகின் மிகக் கடுமையான குளிர்காலங்களில் ஒன்றை எதிர்கொள்ள இருக்கின்றனர். இதனால், உக்ரைனில் இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவுவதில் தான் எங்கள் கவனம் அதிகரித்து வருகிறது. 

இதைத்தொடர்ந்து, உக்ரைனின் அண்டை நாடான மோல்டோவாவில், பாதிப்பைக் கருத்தில் கொண்டு மிகச் சிறப்பான கவனம் தேவை. ஐரோப்பிய ஒன்றியத்தில், சிறந்த நிர்வாகத்திறன் கொண்டு அகதிகளை அனுமதித்துள்ளனர். 

இதேபோன்று மனிதாபிமான நிறுவனங்கள் அகதிகளுக்கு தங்கள் பங்காற்றலை இன்னும் அதிகரிக்க வேண்டும். உக்ரைன் நாட்டில் உள்ள உள்கட்டமைப்புகளில் ரஷ்யாவின் தாக்குதல் அதிகரித்துள்ளதால், மனிதாபிமான நிறுவனங்கள் செய்யும் உதவி பெருங்கடலில் சிறு துளி போன்றது" என்று அவர் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

14 milliyan peoples migretion


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->