அடக்கொடுமையே! 16 பேர் பரிதாப பலி!!!தென்கொரியாவில் பரவும் காட்டுத்தீ!!! - Seithipunal
Seithipunal


தென் கொரியாவின் தெற்கு பகுதிகளில் காட்டுத்தீ கட்டுப்படுத்த முடியாமல் கொளுந்து விட்டு எரிகிறது.இதில் தீயை கட்டுப்படுத்தும் முயற்சிகள்,வறண்ட வானிலை மற்றும் அதிவேக காற்று வீசுவதால் சற்று மெதுவாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்த கொடூரமான காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 16 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர், மேலும் 19 பேர் படுகாயமுற்றுள்ளனர் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்தக் காட்டுத்தீ காரணமாக அண்டாங் மற்றும் இதர தென்கிழக்கு நகரங்கள் மற்றும் டவுன்களில் வசிப்பவர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று அதிகாரிகள் மேலும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தக் காட்டுத்தீ காரணமாக சுமார் 43 ஆயிரம் ஏக்கர் பரபரப்பளவு கொண்ட நிலம் பாதிக்கப்பட்டது. மேலும், நூற்றுக்கணக்கான கட்டமைப்புகள் சேதமடைந்தன. இதில் 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த புத்தர் கோவிலும் அடங்கும்.மேலும் அண்டாங் பகுதியில் வசிக்கும் 5500-க்கும் மேற்பட்டோர் தங்களது வீடுகளில் இருந்து வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கு முன்னதாக தீயணைப்புத் துறையினர் காட்டுத்தீ பெரும்பாலும் அணைக்கப்பட்டு விட்டதாக தெரிவித்தனர்.இருப்பினும்,வறண்ட வானிலை மற்றும் அதீத காற்றோட்டம் காரணமாக மீண்டும் காட்டுத்தீ வேகமாக பரவியுள்ளது.காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் கிட்டத்தட்ட 9 ஆயிரம் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், 130 ஹெலிகாப்டர்கள், நூற்றுக்கணக்கான வாகனங்கள் தீயை அணைக்க பயன்படுத்தப்பட்டு வருகின்றன.இந்த மோசமான நிலைமையில் மக்கள் தங்கள் உயிர்களை காத்துக்கொள்ள பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டுமென அதிகாரிகள் வேண்டி கேட்டுக்கொண்டுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

16 people died Wildfires spreading in South Korea


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->