பெரும் சோகம்! கடலில் கவிழ்ந்த கப்பல்! 13 இந்தியர்கள் மாயம்! - Seithipunal
Seithipunal


ஓமன் கடற்கரையில் எண்ணெய் கப்பல் கவிழ்ந்து 13 இந்தியர்கள் உட்பட 16 பேர் மாயமான தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

கொமொரோஸின் கொடியுடன் கூடிய எண்ணெய் கப்பலான பிரேஸ்டீஜ் பால்கன் வேடன் துறைமுகத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக மத்ரகாவில் இருந்து தென்கிழக்கு 25 கடல் மயில் தொலைவில் ஓமன் துறைமுகத்திற்கு அருகே கப்பல் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.

ஓமன் கடற்கரையில் எண்ணெய் டேங்கர் கவிழ்ந்ததாக அந்நாட்டு கடல் பாதுகாப்பு மையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தகவலை அறிந்த அங்கு விரைந்த கடல் பாதுகாப்பு படையினர்  விபத்தில் காணாமல் போனவர்களை தேடும் பணியில் மற்றும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து ஓமன் கடல்சார் பாதுகாப்பு மையம் தெரிவித்ததாவது, எண்ணெய்டாங்கர் விலகி தலகீழியாக இருந்தது இருப்பின் கப்பல் நிலை பெற்றதா அல்லது எண்ணெய் பொருட்கள் கடலில் கசிந்ததா என்பதை உறுதிப்படுத்தவில்லை.  

ஓமனின் தென்மேற்கு கடற்கரையில் துறைமுகம் அமைந்துள்ளது. இந்த நாட்டின் முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு சுரங்கத் திட்டங்களில் முக்கிய மையமாகும் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது.

இந்த நிலையில், கப்பலில் பயணம் செய்த 16 பேர் அதில் 13 பேர் இந்தியர்கள் என்றும் மூன்று பேர் இலங்கையை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. அவர்களை மீட்கும் நடவடிக்கையில் அந்நாட்டு அரசு ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

16 people including 13 Indians missing after oil tanker capsizes off Oman coast


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->