விமானத்தில் லேப்-டாப்பில் தீப்பிடிப்பு.! உடனடியாக 167 பயணிகள் வெளியேற்றம்.! - Seithipunal
Seithipunal


கரீபியன் நாடான பர்படாசிலிருந்து சுமார் 167 பயணிகளுடன் வந்த ஜெட் ப்ளூ விமானம் நியூயார்க் நகரத்தில் ஜான் கென்னடி விமான நிலையத்தில் தரையிறங்கியது. இந்நிலையில் பயணிகள் அனைவரும் இறங்க தயாராகும் பொழுது எதிர்பாராத விதமாக பயணி ஒருவர் வைத்திருந்த லேப்டாப் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதனால் விமானத்திற்குள் பயணிகள் அனைவரும் பீதியில் அலறினர்.

இதையத்து விமான ஊழியர்கள் பயணிகளை அவசரகால வழியாகவும், வழக்கமாக வெளியேறும் வழியாகவும் உடனடியாக வெளியேற்றினர். தீயனைப்பு உபகரணங்கள் மூலம் உடனடியாக ஊழியர்கள் தீயை அனைத்தனர்.

இருப்பினும் புகையை சுவாசித்தது மற்றும் கூட்ட நெரிசல் காரணமாக பயணிகள் ஏழு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் இந்த தீ விபத்து விமானம் தரையிறங்கிய பிறகு ஏற்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

167 people evacuated as laptop catches fire in plane


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->