தெற்கு உக்ரைனில் ரஷ்யப்படைகள் பயங்கர தாக்குதல் - குழந்தை உட்பட 17 பேர் பலி
17 died as Russian missile attack on south ukraine
தெற்கு உக்ரைனில் ரஷ்யப்படைகள் நடத்திய பயங்கர தாக்குதலில் குழந்தை உட்பட 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையேயான போர் 8 மாதங்களாக தீவிரமாக நடந்து வரும் நிலையில், உக்ரைனில் பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இப்போரில், தொடர்ந்து போராடும் உக்ரைன் படைகள் ரஷ்யாவிடமிருந்து முக்கிய நகர பகுதிகளை கைப்பற்றியுள்ளனர். இதனிடையே உக்ரைன் படைகள் குப்யான்ஸ்க் நகரை கைப்பற்ற முயன்ற பொழுது ரஷ்ய படைகள் தாக்கியதில் 220 உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டன.
இந்நிலையில் இன்று அதிகாலை தெற்கு உக்ரைனின் ஜபோரிஜியா நகரின் மையப்பகுதியில் 12 ஏவுகணைகளை வீசி ரஷ்யப்படைகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் குழந்தை உட்பட 17 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 87 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
மேலும் இந்த தாக்குதலால் நகரின் 5 மாடி கட்டிடம் தரை மட்டமானதாகவும், 9 மாடி கட்டிடம் ஒன்று பாதியாக சிதைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
17 died as Russian missile attack on south ukraine