ஆப்கானிஸ்தான் || மசூதிக்குள் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 18 பேர் பலி - Seithipunal
Seithipunal


ஆப்கானிஸ்தானின் மேற்கு நகரமான ஹெராட்டில் உள்ள குசர்கா மசூதியில் இன்று பொதுமக்கள் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக குண்டு வெடிப்பு ஏற்பட்டது.

இந்த குண்டு வெடிப்பில் மசூதியில் இஸ்லாமிய மதகுரு மவுலாவி முஜீப் ரஹ்மான் அன்சாரி கொல்லப்பட்டார் . இந்த குண்டுவெடிப்பில் 18 பேர் உயிரிழந்ததாகவும், 21க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் ஹெராத் மாகாண ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் ஹமீதுல்லா மோடவாகல் தெரிவித்துள்ளார்.

இந்த குண்டு வெடிப்பிற்கு எந்தவித பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், தாலிபான் உயர் மட்ட அமைச்சரான மவுலானா முஜிபுர் ரஹ்மான் அன்சாரியை குறி வைத்து குண்டுவெடிப்பு நடத்தப்பட்டிருக்கலாம் என்று உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் அன்சாரியின் மரணம் குறித்து வருத்தம் தெரிவித்ததோடு, குண்டுவெடிப்புக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று ஆப்கானிஸ்தான் செய்தி தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

18 died in bomb blast in Afghanistan mosque


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->