ப்ளோரிடா மாகாணத்தை நெருங்கி வரும் இயன் புயல்.! 2.5 மில்லியன் மக்கள் வெளியேற்றம்.! - Seithipunal
Seithipunal


ப்ளோரிடா மாகாணத்தை நெருங்கி வரும் இயன் புயலால் 2.5 மில்லியன் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியே உத்தரவிடப்பட்டுள்ளது.

அட்லாண்டிக் கடலில் மையம் கொண்டுள்ள இயான் புயல் செவ்வாய்க்கிழமை கியூபாவை தாக்கியதில் பெரும்பாலான இடங்களில் கனமழை மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது.

மேலும் கடற்கரை ஒட்டி அமைந்துள்ள மீனவ கிராமங்கள் முழுவதும் வெள்ள நீரில் மூழ்கி, பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கின. இந்நிலையில் கியூபாவை கடந்த பின் இயான் புயல் மேலும் தீவிரமடைந்து அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தின் மேற்குக் கடற்கரையை நகர்ந்து வருகிறது.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 2.5 மில்லியன் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் கடல் பகுதியில் சீற்றம் அதிகரித்து காணப்படுவதால் அப்பகுதியில் உள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 million people evacuated in florida as ian hurricane approaches


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->