நடுவானில் மோதிக்கொண்ட விமானங்கள் - பரிதாபமாக பறிபோன 2 உயிர்.! - Seithipunal
Seithipunal


நடுவானில் மோதிக்கொண்ட விமானங்கள் - பரிதாபமாக பறிபோன 2 உயிர்.!

அமெரிக்கா நாட்டில் உள்ள நெவாடா மாகாணம் ரெனோ நகரில் தேசிய விமான கண்காட்சி நடைபெற்றது. இந்தக் கண்காட்சியில் ஈடுபட்டிருந்த இரண்டு விமானங்களை விமானிகள் தரையிறக்க முற்பட்டனர்.

அப்போது, நடுவானில் இரண்டு விமானங்களும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 விமானங்களின் விமானிகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். 

இந்த விபத்து குறித்து அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு சபை, பெடரல் விமான சேவை நிர்வாகம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தினால் விமானக் கண்காட்சி போட்டிகள் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது. 

இந்தத் தகவலை அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர். இதற்கிடையே இந்த விபத்து குறித்து தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் விபத்திற்கான காரணத்தை ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 piolets died for flight accident in america


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->