எகிப்தில் மினி பேருந்து கால்வாய்க்குள் கவிழ்ந்து விபத்து.! 21 பேர் பலி
21 dead after minibus falls into canal in Egypt
எகிப்தில் மினி பேருந்து கால்வாய்க்குள் கவிழ்ந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
எகிப்து நாட்டின் வடக்கு வாகனமான நைல் டெல்டாவில் நேற்று 35 பயணிகளை ஏற்றிக்கொண்டு மினிபேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்பொழுது டஹாலியா மாகாணம் அஹா நகர் பகுதியில் பேருந்து சென்றபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த கால்வாய்க்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பலர் கால்வாய் நீரில் அடித்துச் செல்லப்பட்டும், சிலர் தண்ணீரிலும் மூழ்கியுள்ளார் மூழ்கினர். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 21 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 14 பேர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் இறந்தவர்களில் மூன்று குழந்தைகளும் அடங்கும் என்று சுகாதார அமைச்சகத்தின் அதிகாரியான டாக்டர் ஷெரிப் மக்கீன் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
21 dead after minibus falls into canal in Egypt