ஏமன் :: திருமண நிகழ்ச்சிக்கு சென்ற படகு கவிழ்ந்து விபத்து - 21 பேர் பலி - Seithipunal
Seithipunal


அரபு நாடான ஏமனில் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற படகு கவிழ்ந்த விபத்தில் 21 பேர் உயிரழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏமனில் ஹொடைடா துறைமுக நகரத்தின் அல்லுஹேயா கிராமத்திலிருந்து 27 பேர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கமரன் தீவிற்கு செங்கடல் வழியாக படகில் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது கமரன் தீவிற்கு அருகே செல்லும் பொழுது எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்த விபத்துக்குள்ளானது.

இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த  பாதுகாப்பு படையினர் மற்றும் கடலோர காவல் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், இந்த விபத்தில் படகில் பயணித்த 21 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 6 பேரை பாதுகாப்பு படைவினர் பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த விபத்தில் 2 ஆண்கள், 12 பெண்கள் மற்றும் 7 சிறுவர்கள் உயிரிழந்ததாகவும், மருத்துவமனையில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கடலோர காவல் படையினர் தெரிவித்துள்ளனர். மேலும் கடலில் காற்றின் வேகத்தால் படகு கவிழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து காவல்துறையினர் இந்த விபத்து குறித்து தீவிரவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

21 died as boat capsized in yemen


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->