கொலம்பியா சுரங்க விபத்து - 21 தொழிலாளர்கள் பலி - Seithipunal
Seithipunal


கொலம்பியாவில் நிலக்கரி சுரங்க விபத்தில் 21 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மத்திய கொலம்பியாவின் குண்டினமார்கா மாகாணத்தில் உள்ள சுடடௌசா நகர் பகுதியில் அமைந்துள்ள நிலக்கரி சுரங்கத்தில் கடந்த 15ஆம் தேதி திடீரென வெடி விபத்து ஏற்பட்டு சுரங்கம் இடிந்து விழுந்தது. இந்த வெடிவிபத்து சுரங்கத்திற்குள் இருந்த மீத்தேன் வாயுவால் வெடிப்பு ஏற்பட்டு, சுரங்கப்பாதைகளால் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட ஐந்து சுரங்கங்களை பாதித்தது.

இதையடுத்து இந்த வெடி விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து இரண்டு நாட்களாக இடைவிடாமல் நடந்த மீட்புபணி நிறைவடைந்துள்ள நிலையில், நிலக்கரி சுரங்க விபத்தில் 21 தொழிலாளர்கள் உயிரிழந்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் விபத்தில் ஒன்பது தொழிலாளர்கள் உயிர் பிழைத்து மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டதாகவும், கொல்லப்பட்ட சுரங்கத் தொழிலாளர்களின் உறவினர்கள் உளவியல் ஆதரவைப் பெற்று வருவதாகவும் குண்டினமார்கா மாகாணத்தின் கவர்னர் நிக்கோலஸ் கார்சியா தெரிவித்துள்ளார்.

இதையடுத்து விபத்தின் போது சுரங்கத்தில் இருந்த தொழிலாளர்கள் அனைவரும் கணக்கு காட்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் கொலம்பியாவில் கடந்த ஆண்டு நாடு முழுவதும் சுரங்கங்களில் 117 விபத்துகள் பதிவாகியுள்ளதாக தேசிய சுரங்க நிறுவனம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

21 workers killed at coal mine in Colombia


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->