ஒரே மாதத்தில் உயிரிழந்த 220 குழந்தைகள் - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


நமது அண்டை நாடான பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் கடந்த மூன்று வார காலத்தில் சுமார் 200-க்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. 

அவ்வாறு உயிரிழந்த குழந்தைகளில் ஏராளமானோர் நிம்மோனியா தடுப்பு மருந்து எடுத்துக் கொள்ளவில்லை என்றும் அவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியின்றி அவதியுற்று வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பஞ்சாப் மாகாணத்தில் நிலவும் கடும் குளிர் காரணமாக பள்ளிகளில் அதிகாலை இறைவணக்க கூட்டத்தை நடத்த அம்மாகாண அரசு ஏற்கனவே தடை விதித்து இருந்தது. இந்த தடை உத்தரவு ஜனவரி 31-ம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது ஜனவரி 1-ம் தேதியில் இருந்து அம்மாகாணத்தில் 10 ஆயிரத்து 520 பேருக்கு நிம்மோனியா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் உயிரிழந்த 220 குழந்தைகளின் வயது 5-க்கும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

220 childrens died in pakisthan punjab


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->