காசா மீது மீண்டும் இஸ்ரேல் தாக்குதல்; 23 பேர் உயிரிழப்பு..!
23 killed in Israeli strike on Gaza again
இஸ்ரேல் மற்றும் காசா இடையிலான 07 வார போர் நிறுத்தம் முடிவடைந்துள்ளது. இந்நிலையில், மீண்டும் தங்கள் நாட்டிற்கான பாதுகாப்பு பகுதியை அதிகரிப்பதற்காக காசா மீது இஸ்ரேல் தாக்குதலை விரிவுப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இன்று காசாவின் ஷிஜையா நகரில் உள்ள நான்கு மாடி கட்டிடம் மீது இஸ்ரேல் விமானம் தாக்குதல் நடத்தியதில், 23 பேர் உயிரிழந்ததாக காசாவின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதாவது, ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவரை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளது. அத்துடன், மக்கள் அதிகமாக வாழும் நகர்ப்புற பகுதிகளில் ஹமாஸ் பதுங்கியுள்ளனர் என்று ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.

இதுவரை, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போரில் காசாவில் உள்ள 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதேவேளை, 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 07ஆம் தேதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் நாட்டில் நுழைந்து நடத்திய தாக்குதில் 1200 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும், 250-க்கும் மேற்பட்டோரை பணயக் கைதிகளாக பிடித்துச் சென்றனர். இவர்களில் பெரும்பாலானோர் போர் நிறுத்தத்தின் போது விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
English Summary
23 killed in Israeli strike on Gaza again