ஈராக் || குர்திஸ்தான் பகுதியில் துருக்கி விமானப்படை தாக்குதல் - 23 பயங்கரவாதிகள் பலி - Seithipunal
Seithipunal


ஈராக்கில் குர்திஸ்தான் பகுதியில் துருக்கி விமானப்படை தாக்குதலில் 23 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளனர்.

மேற்காசிய நாடான ஈராக்கில் வடக்குப் பகுதியான அசோஸ் மாகாணத்தில் குர்திஸ்தான் பகுதியை ஆட்சி செய்து வரும் குா்திஸ்தான் தொழிலாளா் கட்சி அல்லது பிகேகே அமைப்பானது 1984ஆம் ஆண்டு முதல் துருக்கி நாட்டின் மீது எல்லை கடந்த பயங்கரவாதத்தில் ஈடுபட்டு வருகிறது.

இதனால் அமெரிக்கா, துருக்கி மற்றும் ஐரோப்பிய நாடுகள் இந்த அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்தன. மேலும் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் துருக்கி பயங்கரவாத நடவடிக்கைகளை முறியடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் ஈராக்கில் 140 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள அசோஸ் மாகாணத்தில் குர்திஸ்தான் பயங்கரவாதிகளின் மீது எஃப்-16 போா் விமானங்கள் மூலம் துருக்கி விமானப்படை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 23 குர்திஸ்தான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக துருக்கி ராணுவ பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

23 Kurdish militants died in turkey Air attack on Iraq


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->