சீனா அத்துமீறல்... ஒரே நாளில் தைவானுக்குள் நுழைந்த 24 போர் விமானங்கள்..! - Seithipunal
Seithipunal


தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதியாக சீனா கருதி வரும் நிலையில் அமெரிக்க பிரதிநிதிகளின் அடுத்தடுத்த தைவான் பயணம் சீனாவை கடும் கோபத்திற்குள்ளாகியது. இதையடுத்து தைவான் எல்லைப் பகுதிகளில் போர் கப்பல்கள் மற்றும் விமானங்கள் மூலம் சீனா தொடர்ந்து போர் பயிற்சி நடத்தி தைவானை அச்சுறுத்தி வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில் நேற்று தைவான் எல்லைக்குள் சீன விமானங்கள் மற்றும் சீன போர்க்கப்பல்கள் அத்துமீறி நுழைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், சீனாவின் ஜே -10 ,ஜே-11,ஜே-16 மற்றும் சுயு-30 இலகு ரக விமானங்கள் மற்றும் ஹெச் 6 குண்டு வீசும் விமானங்கள் என 24 போர் விமானங்கள் ஒரே நாளில் தைவான் எல்லைக்குள் நுழைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 4 சீன போர்க்கப்பல்கள் தைவான் கடல் பகுதிகளில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தரையிலிருந்து இலக்குகளைத் தாக்கும் ஏவுகணை அமைப்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டடு, தைவான் போர் விமானங்கள் சீன விமானங்களையும், போர்க்கப்பல்களையும் கண்காணிப்பதற்காக நீரினை பகுதிகளுக்கு அனுப்பப்பட்டதாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

24 china war jets entered Taiwan in one day


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->